இறைவனின் திருப்பெயரால்
நண்பர்கள் சமையல் குழு & கேட்டரிங்

எங்களைப் பற்றி ...


எல்லாப்புகழும் இறைவனுக்கே!!

அன்புடையீர்!

           திருமணம், சடங்கு போன்ற விசேஷங்களிலும் தரமான முறையில், சுகாதாரமாக சிறந்த சுவையில், மண்டபங்களிலும், உங்கள் இல்லங்களிலும் வந்து சமையல் செய்து தருகிறோம். மேலும் பண்டிகை தினங்களிலும், உங்கள் இல்லங்களில் நடக்கும் சகல வைபவங்களுக்கும், அரசியல் விழாக்களிலும் அலுவலங்களில் நடக்கும் விழாக்களுக்கும் எங்கள் இடத்தில் வைத்து தயார் செய்து உங்கள் இல்லம் மற்றும் அலுவலகங்களில் டோர் டெலிவரி செய்து தருகிறோம்.

சிறந்த சமையல் கலைஞர் விருது:-

          கடந்த 10 வருடங்களாக எங்களுக்கு ஆதரவளித்து வரும் வாடிக்கையாளர்களாகிய உங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். தங்களின் மகத்தான பேராதரவினால் எங்களுக்கு சமீபத்தில் சென்னை கலைமன்றம் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் திரு. ராஜன் அவர்கள் மூலம் சிறந்த சமையல் கலைஞருக்கான மகாத்மா காந்தி விருது வழங்கி கௌரவித்தது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். விருதுகள் எங்களின் சேவைக்கான அங்கீகாரம் மட்டுமல்ல எங்களை மேலும் மேலும் சிறப்பான சேவை தந்திட ஊக்கப்படுத்திவருகிற்து.

உணவு வகைகள்:-

          அசைவ உணவு வகைகள், சைனீஸ், தந்தூரி வகைகள் லேபர் சார்ஜாகவும், மொத்த காண்ட்ராக்டாகவும், உங்கள் எண்ணத்திற்கேற்ப சிறப்பான முறையில் தயார் செய்து தருகிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

குறிக்கோள்:-

          தரம், சுகாதாரம், சுவை, நம்பிக்கை இவையே எங்கள் குறிக்கோளாகக் கொண்டு கடந்த 10 வருடங்களாக இயங்கி வரும் நாங்கள் தற்போது கடந்த ஒரு வருடமாக திருமண மண்டப அலங்கார துறையிலும் கால்பதித்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

ஒரே குடையின் கீழ் அனைத்து சேவைகளும்:-

          திருமண மண்டப அலங்காரம், வீடியோ சூட்டிங், போட்டோஸ், மணமாலைகள், பூச்செண்டு, அலங்காரம், டேபிள், சேர், பஃபே டெண்ட், சப்ளையர், ஐஸ்க்ரீம், பீடா, தாம்பூலக்கைப்பை ஆகியவை சிறந்த முறையில் செய்து தருகிறோம். மேலும் கை தேர்ந்த ஆண், பெண் கலைஞர்களைக் கொண்டு மணமகன், மணமகள் அலங்காரமும் சிறப்பான முறையில் செய்து தருகிறோம்.

          எங்களிடம் திருமண தேதியை மட்டும் தெரிவித்தால் போதும் மண்டபம் புக்கிங் செய்வதிலிருந்து, சமையல், விருந்து, உபச்சாரம், கார், வேன் ஏற்பாடு செய்வது மணமக்கள் அலங்காரம், மேடை அலங்காரம், என அனைத்து விஷயங்களிலும் உங்கள் எண்ணங்களை வண்ணங்கலாக்கித் தருவோம் என்பதை நம்பிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

வேண்டுகோள்:-

குறிப்பு: எங்களது நண்பர்கள் சமையல் குழு பெயரைச்சொல்லி வேறு சில சமையல் குழுக்கள் ஆர்டர் எடுத்து ஏமாற்றி வருகிறது. ஆகவே வாடிக்கையாளர்கள் ஏமாந்து விடாமல் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்களில் மட்டும் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

நண்பர்கள் சமையல் குழு
மேலப்பாளையம், திருநெல்வேலி

Mr. M.N. Aashique: +91 98430 16163       Mr. Ubaithullah: +91 96264 03618      Mr. M.A. Siddique: +91 99445 61189      Mr. M.N. Bawa Maideen: +91 99448 09079